Pivot Table Introduction

 EXCEL PIVOT TABLE - ஒரு எளிய அறிமுகம் (Beginner Guide)

👇 Watch & share if you love this content!
🖥️ Check this out: Pivot Table Introduction


1. PIVOT TABLE என்றால் என்ன?

Pivot Table என்பது Excel-இல் உள்ள ஒரு powerful tool. இது உங்கள் data-ஐ summarize செய்ய, analyze செய்ய, compare மற்றும் patterns கண்டறிய உதவுகிறது."


2. எப்போது PIVOT TABLE பயன்படுத்தலாம்?

நீங்கள் ஒரு பெரிய data table-ஐ நிர்வகிக்கும்போது, அதிலிருந்து விரைவில் useful information-ஐ பெற வேண்டுமெனில் Pivot Table perfect solution.

✅ Example:

  • ஒரு பட்டியலில் இருந்து மொத்தம், சராசரி, எண்ணிக்கை போன்றவற்றை காண.
  • வகைப்பட்ட தரவுகளை ஒப்பிட.
  • நிறுவனப் புள்ளிவிவரங்களை சுருக்கமாக பார்க்க.
  • 📌 எளிய உதாரணம்:

    பரிசு

    விலை

    பிரிவு

    Pen

    10

    Stationery

    Pencil

    5

    Stationery

    Apple

    20

    Fruits

    Banana

    15

    Fruits

    Pivot Table Output:

    பிரிவு

    மொத்த விலை

    Stationery

    15

    Fruits

    35


3. PIVOT TABLE உருவாக்குவது எப்படி?

🟢 Step 1: உங்கள் தரவு சரியான வடிவில் இருக்க வேண்டும் (தலைப்புகளுடன் கூடிய வரிசைகள் மற்றும் நெடுவரிசைகள்).
🟢 Step 2: Excel இல் Insert → PivotTable என்பதைத் தேர்வு செய்யவும்.
🟢 Step 3: தரவு வரம்பைத் தேர்வு செய்து, புதிய worksheet அல்லது தற்போதைய worksheet இல் Pivot Table ஐ உருவாக்கவும்.
🟢 Step 4: PivotTable Field List இல் இருந்து, Rows, Columns, Values, மற்றும் Filters பகுதிகளில் தேவையான தேவையான fields drag & drop செய்யுங்கள்.


4. Example: SALES DATASET மூலம் PIVOT TABLE உருவாக்குதல்

உதாரண தரவு:

Product

Region

Sales

A

North

100

B

South

200

A

East

150

B

West

250

✅ Pivot Table உருவாக்கும் Simple Steps:

  1. Data- Select செய்யவும்
    மேலே உள்ள அட்டவணையை Excel-ல் mark பண்ணுங்கள்.
  2. Insert > PivotTable கிளிக் செய்யவும்
    Excel மேலே Insert tab > PivotTable தேர்வு செய்யவும்.
  3. "New Worksheet" தேர்வு செய்து OK
    புதிய worksheet-ல் Pivot Table உருவாகும்.
  4. Pivot Table Field Pane-ல்:
    • Rows → "Product" drag செய்யவும்.
    • Columns → "Regiondrag செய்யவும்.
    • Values → "Sales" drag செய்யவும்.

🎉முடிவாக:

Pivot Table-ல் ஒவ்வொரு Productக்கும் Regions wise மொத்த விற்பனை தொகை வரும்.

Product

North

South

East

West

Grand Total

A

100

150

250

B

200

250

450

Grand Total

100

200

150

250

700



💡 முடிவு:

Excel இல் Pivot Table பயன்படுத்தி, நீங்கள் உங்கள் தரவை எளிதாக சுருக்கி, பகுப்பாய்வு செய்து, முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும். இது உங்கள் தொழில்முனைவோர்களுக்கு, விற்பனை நிர்வாகிகளுக்கு, மற்றும் தரவு பகுப்பாய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்கள் Excel இல் Pivot Table பயன்படுத்துவதில் உதவுங்கள்!


Comments